ஃப்ரிட்ஜ்கள் மிகவும் அத்தியாவசியமாகிவிட்டன, அது இல்லாத ஒரு சமையலறையை கற்பனை செய்து பார்க்க முடியாது. இந்த வீட்டு உபயோகப் பொருட்களினால், உணவு நீண்ட காலம் நீடிக்கும், உணவு தயாரிப்பதற்கான சிரமத்தை எளிதாக்குகிறது. இப்போது ஃப்ராஸ்ட் ஃப்ரீ ஃப்ரிட்ஜ்கள் கிடைப்பதால், உங்கள் பழைய ஃப்ரிட்ஜை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆனால் ஃப்ராஸ்ட் ஃப்ரீ ஃப்ரிட்ஜ் என்றால் என்ன, உங்கள் பழைய ஃப்ரிட்ஜை விட இது ஏன் சிறந்தது?
ஃப்ராஸ்ட் ஃப்ரீ ஃப்ரிட்ஜ் என்றால் என்ன?
எளிமையாகச் சொன்னால், ஃப்ராஸ்ட் ஃப்ரீ ஃப்ரிட்ஜ் ஆனது உங்கள் ஃப்ரிட்ஜின் உட்புறச் சுவர்களில் ஐஸ்கட்டி படிவதை அனுமதிக்காது. இந்த தொழில்நுட்பம் இல்லாத ஃப்ரிட்ஜ்கள் ஐஸ்கட்டியை உருவாக்கலாம், இதனால் ஃப்ரீஸரில் பொருட்களை சேமித்து வைப்பதை கடினமாகிறது. ஃப்ரிட்ஜின் கோல்ட் காயில்கள் மீது நீராவி படும்போது ஃப்ராஸ்ட் உருவாகிறது.
ஃப்ராஸ்ட் ஃப்ரீ ஃப்ரிட்ஜ் ஆனது ஃப்ரீஸர் அறையை அடைப்பில்லாமல் வைத்திருக்கும் மற்றும் கைமுறையாக டிஃப்ராஸ்ட் செய்யத் தேவையில்லை. அது பனியை தானாக உருக்கி விடும். உங்கள் உணவில் அல்லது உங்கள் ஃப்ரிட்ஜின் சுவர்களில் ஃப்ராஸ்ட் இருக்காது. அவை நிலையான வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை பராமரிக்கின்றன, இதனால், உங்கள் உணவை நீண்ட காலம் நீடிக்கச் செய்கிறது. இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம், ஃப்ரிட்ஜில் உள்ள ஐஸ்கட்டியை சுத்தம் செய்ய மக்கள் மணிநேரம் போராட வேண்டியதில்லை.
ஃப்ராஸ்ட் ஃப்ரீ ஃப்ரிட்ஜ் எப்படி வேலை செய்கிறது?
பழைய ஃப்ரிட்ஜ்கள் நேரடி குளிரூட்டும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன, இது ஃப்ரிட்ஜ்க்குள் குளிர்ந்த காற்றை பரப்புகிறது. வெப்பநிலையை கட்டுப்படுத்த வழி இல்லை. இது பனி திரட்சிக்கு வழிவகுத்தது, இதற்கு கைமுறையாக டிஃப்ராஸ்ட் செய்யத் தேவைப்பட்டது. ஃப்ராஸ்ட் ஃப்ரீ தொழில்நுட்பத்தின் மூலம் இது மாறிவிட்டது.
ஃப்ராஸ்ட் ஃப்ரீ ஃப்ரிட்ஜ் மூன்று கூறுகள் கொண்டுள்ளன – ஒரு டைமர், ஹீட்டிங் காயில் மற்றும் வெப்பநிலை சென்சார். ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் பிறகு, ஃப்ரீஸ்ர காயில்ளில் பொருத்தப்பட்ட ஹீட்டிங் காயிலை இயக்குகிறது. இது பனியை உருக்குகிறது, மேலும் வெப்பநிலை சென்சார் உயரும் வெப்பநிலையை உணர வேலை செய்கிறது. ஐஸ்கட்டியிலிருந்து வரும் நீர் ஒரு சிறிய பாத்திரத்தில் வெளியேற்றப்படுகிறது, அது காற்றில் ஆவியாகிறது. வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸுக்கு மேல் உயர்வதை உணரும் போது, அது தானாகவே ஹீட்டிங் காயில்களை அணைக்கிறது. காயில்களின் வெப்பம் அதிக ஆற்றலைப் பயன்படுத்துவதால் நேரடி கூலிங் தொழில்நுட்பத்தை விட அதிக ஆற்றல் தேவைப்படுகிறது.
ஃப்ராஸ்ட் ஃப்ரீ ஃப்ரிட்ஜ்களை வாங்குவது பயனுள்ளதாக இருக்குமா?
ஃப்ராஸ்ட் ஃப்ரீ ஃப்ரிட்ஜ்கள் வழக்கமான ஃப்ரிட்ஜ்களை விட விலை அதிகம் என்றாலும், அதில் முதலீடு செய்வதே புத்திசாலித்தனம். இது மிகவும் திறமையானது மட்டுமல்ல, உங்கள் நேரத்தையும் மிச்சப்படுத்தும். சிங்கிள் டோர் ஃப்ரிட்ஜ்கள் இந்த தொழில்நுட்பத்தை அரிதாகவே பயன்படுத்துகின்றன, எனவே நீங்கள் டபுள் டோர் ஃப்ரிட்ஜில் முதலீடு செய்ய வேண்டும். ஆனால் நீண்ட காலத்திற்கு, உங்கள் உணவை சேமித்து வைக்க கூடுதல் இடம் இருப்பதால் பெரிய குடும்பங்களுக்கு இது நிச்சயமாக நன்மை அளிக்கும். டபுள் டோர் ஃப்ரிட்ஜ்கள் பொதுவாக 50-650 லிட்டர் கொள்ளளவு கொண்டவை, இது உங்கள் தேவைகளை சேமிப்பதற்கு தாராளமானது.
மேலும் படிக்கவும்: ஸ்மார்ட் ரெஃப்ரிஜிரேட்டர் என்றால் என்ன? இது உங்களுக்கானதா?
ஃப்ராஸ்ட் ஃப்ரீ ஃப்ரிட்ஜ்கள் ஃப்ரிட்ஜின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை உங்களுக்கு வழங்குகின்றன, இது ஒரு பெரிய நன்மையாகும், மேலும் பொருட்களை அதிக நேரம் ஃப்ரிட்ஜில் வைக்க அனுமதிக்கிறது, இதனால் அதன் ஊட்டச்சத்துக்கள் பாதுகாக்கப்படுறது. இது காற்றோட்டத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலமும், நிலையான வெப்பநிலையை பராமரிப்பதன் மூலமும் துர்நாற்றத்தைத் தடுக்கிறது.
மேலும் வழக்கமான ஃப்ரிட்ஜ்களை விட ஃப்ராஸ்ட் ஃப்ரீ ஃப்ரிட்ஜ்கள் நீண்ட ஆயுளைக் கொண்டுள்ளன. நினைவில் கொள்ள வேண்டிய ஒரே விஷயம் என்னவென்றால், அவை வழக்கமான ஃப்ரிட்ஜ்களை விட அதிக ஆற்றலைப் பயன்படுத்துகின்றன. இருப்பினும், இதற்கு குறைந்த பராமரிப்பு தேவைப்படும், ஏனெனில் அவற்றை அடிக்கடி சுத்தம் செய்ய தேவையில்லை. ஃப்ராஸ்ட் ஃப்ரீ ஃப்ரிட்ஜ்கள் தொழில்துறை தரநிலையாக மாறி வருவதால், நேரடி கூலிங் ஃப்ரிட்ஜ்களும் விரைவில் காலாவதியாகிவிடும்.
Unleash your inner geek with Croma Unboxed
Subscribe now to stay ahead with the latest articles and updates
You are almost there
Enter your details to subscribe
Happiness unboxed!
Thank you for subscribing to our blog.
Disclaimer: This post as well as the layout and design on this website are protected under Indian intellectual property laws, including the Copyright Act, 1957 and the Trade Marks Act, 1999 and is the property of Infiniti Retail Limited (Croma). Using, copying (in full or in part), adapting or altering this post or any other material from Croma’s website is expressly prohibited without prior written permission from Croma. For permission to use the content on the Croma’s website, please connect on contactunboxed@croma.com
- Related articles
- Popular articles
Atreya Raghavan
Comments