உங்கள் லேப்டாப்பில் YouTube வீடியோக்களை எவ்வாறு பதிவிறக்குவது

ஆஃப்லைன் பொழுதுபோக்குக்காக உங்களுக்குப் பிடித்தமான வீடியோக்களைப் பதிவிறக்கவும்

உங்கள் லேப்டாப்பில் YouTube வீடியோக்களை எவ்வாறு பதிவிறக்குவது

YouTube உலகின் மிகப்பெரிய வீடியோ பகிர்வு தளமாகும். பயிற்சி வகுப்புகளை பார்த்தல், திரைப்படங்கள், ஆவணப்படங்கள், வீடியோக்கள் அல்லது நேரலை கச்சேரிகள் மற்றும் கிரிக்கெட் போட்டிகளை கண்டு களித்தல் போன்ற அனைத்தையும் YouTube கொண்டுள்ளது. 

இருப்பினும், YouTube -ஐ பொறுத்தவரையில், எல்லா நேரத்திலும் நிலையான இணைய இணைப்பு தேவைப்படும். இது இல்லாமல் இருந்தால் ப்ளேபேக் செய்வதில் இடையூறு இருக்கலாம், இது அதிக எரிச்சலை ஏற்படுத்தும், இதற்கு என்னதான் தீர்வு. உங்கள் YouTube வீடியோக்களை ஆஃப்லைனில் பார்க்க உங்கள் லேப்டாப் அல்லது டெஸ்க்டாப்பில் பதிவிறக்கவும். இந்த வழிகாட்டியில், அதை எப்படி செய்வது என்று நாங்கள் உங்களுக்குச் சொல்வோம்.

வீடியோக்களைப் பதிவிறக்குவதற்கான எந்தவொரு முறையும் அதிகாரப்பூர்வமற்றது மற்றும் நீங்கள் பதிவிறக்கிய வீடியோக்களை வேறு இடங்களில் பயன்படுத்தினால் சட்டரீதியான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதை நினைவில் கொள்க. ஆஃப்லைனில் பார்க்க, ஆப்-இல் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய YouTube Premium ஐ பயன்படுத்த நாங்கள் எப்போதும் பரிந்துரைக்கிறோம், ஆனால் கீழே குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்ற மூன்றாம் தரப்பு சேவைகளை பயன்படுத்தி பதிவிறக்குவதில் உள்ள இடர்களுக்கு நீங்களே பொறுப்பாவீர்கள்.

உங்கள் கணினியில் YouTube வீடியோக்களை எவ்வாறு பதிவிறக்குவது

உங்கள் லேப்டாப் அல்லது டெஸ்க்டாப்பில் YouTube வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும்.

1. நீங்கள் YouTube வீடியோக்களைப் பதிவிறக்கத் தொடங்கும் முன், நம்பகமான வீடியோ டவுன்லோடர் தேவை. 4K Video Downloader, WinX YouTube Downloader மற்றும் ClipGrab. உள்ளிட்ட பல விருப்பத்தெரிவுகள் ஆன்லைனில் உள்ளன.

2. உங்கள் PC-இல் மென்பொருளைப் பதிவிறக்கவும். அது முடிந்ததும், நிறுவியை இயக்கவும் மற்றும் அதை நிறுவல் காட்சியில் உள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்.

3. நீங்கள் பதிவிறக்க விரும்பும் YouTube வீடியோவின் இணைப்பை நகலெடுக்கவும்.

4. வீடியோ டவுன்லோடரைத் திறந்து, வீடியோவின் இணைப்பை பெட்டியில் இடவும்.

5. நீங்கள் வீடியோவைப் பதிவிறக்க விரும்பும் வடிவமைப்பையும் (MP4, MKV, முதலியன) பதிவிறக்க விரும்பும் தரத்தையும் (720p, 1080p மற்றும் பல) தேர்ந்தெடுக்கவும்.

6. உங்கள் கணினியில் வீடியோ பதிவிறக்கம் செய்ய விரும்பும் கோப்புறையைத் தேர்ந்தெடுக்கவும்.

அவ்வளவுதான்! நீங்கள் விரும்பிய வீடியோவை பதிவிறக்கம் செய்துவிட்டீர்கள், இப்போது நீங்கள் விரும்பும் எந்த நேரத்திலும் பார்க்கலாம்.

Youtube வீடியோக்களை பதிவிறக்கம் செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்புகள்

1. தனிப்பட்ட நுகர்வுக்கான வீடியோக்களை மட்டும் பதிவிறக்கம் செய்து, அதைப் பதிவிறக்குவதற்குத் தேவையான அனுமதிகள் உங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

2. நீங்கள் ஒரு சிறந்த தெளிவுத்திறனில் வீடியோவைப் பதிவிறக்குகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், இதன் மூலம் நீங்கள் சிறந்த தெளிவுதிறன் கொண்ட வீடியோவை கண்டுகளிக்க முடியும்.

3. YouTube இன் தேவைகளுடன் இணக்கத்தன்மையை உறுதிப்படுத்த, உங்கள் வீடியோ பதிவிறக்க மென்பொருளைப் புதுப்பிக்கவும்.

இது உங்களுக்கு உதவியாக இருந்திருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்!

Unleash your inner geek with Croma Unboxed

Subscribe now to stay ahead with the latest articles and updates

You are almost there

Enter your details to subscribe

0

Disclaimer: This post as well as the layout and design on this website are protected under Indian intellectual property laws, including the Copyright Act, 1957 and the Trade Marks Act, 1999 and is the property of Infiniti Retail Limited (Croma). Using, copying (in full or in part), adapting or altering this post or any other material from Croma’s website is expressly prohibited without prior written permission from Croma. For permission to use the content on the Croma’s website, please connect on contactunboxed@croma.com

Comments

Leave a Reply
  • Related articles
  • Popular articles
  • Laptops

    Everything to know about the Windows 11 OS

    Khevna Pandit

  • Laptops

    Republic Day 2022: The unspoken rights as a consumer! 

    Khevna Pandit

  • Laptops

    2021 Unboxed: Croma's year in review

    Khevna Pandit

  • Smartphones

    How to unlock Android smartphone password without formatting

    Chetan Nayak

  • Smartphones

    Can I upgrade my 4G smartphone to 5G?

    Chetan Nayak

  • Air Conditioners

    Understanding symbols on your AC remote

    Atreya Raghavan