எனது ஃப்ரிட்ஜ் நான் எவ்வளவு அடிக்கடி டீஃப்ராஸ்ட் செய்யவேண்டும்?

ஒவ்வொரு ஃப்ரிட்ஜ்-க்கான டீஃப்ராஸ்ட் செயல்முறை மாறுபடும்

எனது ஃப்ரிட்ஜ் நான் எவ்வளவு அடிக்கடி டீஃப்ராஸ்ட் செய்யவேண்டும்?

உங்கள் ஃப்ரிட்ஜ் குளிரூட்டும் செயல்பாட்டில் டீஃப்ராஸ்ட் ஒரு முக்கிய பகுதியாகும். பெயருக்கு ஏற்றவாறு, இது ஃப்ராஸ்ட் செயல்முறையை தவிர்த்து, உங்கள் ஃப்ரிட்ஜ்-இன் செயல்திறன் மற்றும் ஆற்றல் திறனை அதிகரிக்கிறது. உங்கள் ஃப்ரிட்ஜ் -ஐ ஏன் டீஃப்ராஸ்ட் செய்யவேண்டும் என்பது பற்றி இங்கே காணலாம், மேலும் நீங்கள் அதை எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும் என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம்.

நாம் ஃப்ரிட்ஜ்-ஐ டீஃப்ராஸ்ட் செய்யவேண்டும்?

உங்கள் ஃப்ரிட்ஜ்-ஐ ஏன் டீஃப்ராஸ்ட் செய்யவேண்டும் என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. உங்கள் ஃப்ரீசரில் ஐஸ் உருவாகி நிறைய இடத்தை எடுத்துக்கொள்ளும் என்பதால் அதனை நீக்கவேண்டும். ஐஸ் கட்டி உருவாக்கம் உங்கள் ஃப்ரிட்ஜ்-இன் செயல்பாட்டையும் இடையூறு செய்யும். ஆவியாகும் காயிலில் உறை பனி உருவாகினால், வெப்ப இழப்பு ஏற்படக்கூடும். 

உறை பனி அடுக்கு உங்கள் ஃப்ரிட்ஜ்-இன் ஆற்றல் செயல்பாட்டையும் பாதிக்கும். குளிரூட்டலை பராமரிக்க அதிக செயல்பாடு தேவை என்பதால், அது அதிக ஆற்றலை பயன்படுத்தக்கூடும். சிறிது நேரத்திற்கு பிறகு ஐஸ் கட்டி உருவாக்கம் நாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். இவை அனைத்தும் ஃப்ரிட்ஜ்-ஐ டீஃப்ராஸ்ட் செய்யவேண்டும் என்பதற்கான காரணங்கள் ஆகும். 

உங்கள் ஃப்ரிட்ஜ்-ஐ டீஃப்ராஸ்ட் செய்வதற்கான வழிமுறைகள் உள்ளன. ஃப்ராஸ்ட்டிங் ஆகுவதை தடுக்க நீங்கள் அவற்றை பின்பற்றலாம்.

உங்கள் ஃப்ரீசரை தானாகவே டீஃப்ராஸ்ட் செய்தல்

1. உங்கள் ஃப்ரீசரை காலி செய்திடுங்கல்.

2. உங்கள் ஃப்ரிட்ஜ்-இன் வெட்பநிலை நாபை கண்டுபிடியுங்கள்.

3. வெட்பநிலை நாபின் பக்கத்தில் எவ்வாறு டீஃப்ராஸ்ட் செய்வது என்பதற்கான வழிமுறைகளை நீங்கள் பார்க்கலாம்.

4. வெட்பநிலை நாபின் மையத்தில் ஒரு பட்டன் இருக்கும்.

உங்கள் ஃப்ரிட்ஜ்-ஐ கைமுறையாக டீஃப்ராஸ்ட் செய்தல்

1. உங்கள் ஃப்ரிட்ஜ்-ஐ மின்சார இணைப்பிலிருந்து நீக்கிடுங்கள்.

2. உங்கள் ஃப்ரீசரை திறக்கவும்.

3. ஃப்ரீசரில் உள்ள அனைத்து பொருட்களையும் வெளியில் எடுக்கவும்.

4. டிராயர்கள் மற்றும் ஐஸ்கியூப் ட்ரே-க்களை நீக்கவும்.

5. உள்ளே ஒரு பாத்திரத்தில் வெண்ணீரை வைக்கவும். வெந்நீர் உறைதல் செயல்முறையை விரைவுப்படுத்தும்.

6. இப்போது ஐஸ் கட்டிகள் உடையும் வரை காத்திருக்கவும்.

7. அனைத்து ஐஸ்களும் உருகியதும், ஒரு துணியால் நீங்கள் அழுக்கை துடைக்கலாம்.

ஃப்ராஸ்ட் இல்லாத ஃப்ரிட்ஜ்கள்

ஃப்ராஸ்ட் இல்லாத ஃப்ரிட்ஜ்கள் ஹீட்டிங் காயில் மற்றும் வெட்பநிலை சென்சாருடன் வருகிறது. உறைபனி உருவாகும்போது அவை தானாகவே கண்டறிந்து, பனியை ஆவியாக்க ஹீட்டரை செயல்படுத்துகின்றன. இதில் எந்த பட்டன் அழுத்தமும் தேவையில்லை.

நான் எவ்வளவு அடிக்கடி டீஃப்ராஸ்ட் செய்யவேண்டும்?

இதற்கு எந்த நேரடியான பதிலும் இல்லை. ஒரு வருடத்திற்கு ஒருமுறை டீஃப்ராஸ்ட் செய்யவேண்டும் என பலர் கூறுகின்றனர். ஆனால் உங்கள் பயன்பாடு குறைவாக இருந்தால், உங்கள் ஃப்ரிட்ஜ் பகுதி குளிர்ந்த நிலையில் இருந்தால், பனி உருவாக்கம் குறைவாக இருக்கும். ஆனால், நீங்கள் அடிக்கடி ஃப்ரிட்ஜ் பயன்படுத்துவதாக இருந்தால், ஈரப்பதம் உள்ள இடத்தில் வசித்தால், பலமுறை டீஃப்ராஸ்ட் செய்யவேண்டும். ஐஸ் அடுக்கின் அளவை பொறுத்து டீஃப்ராஸ்ட் செய்வதை தீர்மானித்தீடுங்கள்.

Unleash your inner geek with Croma Unboxed

Subscribe now to stay ahead with the latest articles and updates

You are almost there

Enter your details to subscribe

0

Disclaimer: This post as well as the layout and design on this website are protected under Indian intellectual property laws, including the Copyright Act, 1957 and the Trade Marks Act, 1999 and is the property of Infiniti Retail Limited (Croma). Using, copying (in full or in part), adapting or altering this post or any other material from Croma’s website is expressly prohibited without prior written permission from Croma. For permission to use the content on the Croma’s website, please connect on contactunboxed@croma.com

Comments

Leave a Reply
  • Related articles
  • Popular articles
  • Refrigerators

    Save your money this Republic Day with our sale

    Arya Babu

  • Refrigerators

    Types of refrigerators: How to choose the best one for you?

    Khevna Pandit

  • Refrigerators

    Tips to consider when buying a new refrigerator

    Khevna Pandit

  • Smartphones

    How to unlock Android smartphone password without formatting

    Chetan Nayak

  • Smartphones

    Can I upgrade my 4G smartphone to 5G?

    Chetan Nayak

  • Air Conditioners

    Understanding symbols on your AC remote

    Atreya Raghavan