எக்ஸ்சேஞ்ச் செய்வதென்பது உங்கள் சாதனம் மற்றும் கேட்ஜெட்டுகள் புதுப்பிக்கப்படுவதற்குக் கொடுக்கும் ஒரு வாய்ப்பாகும். அத்துடன் புதிய பொருளை வாங்கும்போது தள்ளுபடியும் கிடைக்கும். பழைய லேப்டாப்கள், ஸ்மார்ட்ஃபோன்கள் அல்லது பிற தொழில்நுட்பச் சாதனத்தைக் கொடுப்பதற்கு முன்பு சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இந்த வழிமுறைகள் எக்ஸ்சேஞ்ச் செயல்முறைய எளிதாக்கும் மேலும் உங்கள் பழைய சாதனத்திலிருக்கும் தரவுகளைப் பாதுகாக்கும்.
நீங்கள் எக்ஸ்சேஞ்ச் செய்யும் பொருளைப் பொறுத்து வழிமுறைகள் மாறுபடும். எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும் உங்களுக்குப் பொருந்தாமல் போகலாம். அவற்றை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. முதல் வழிமுறையைப் பார்க்கலாம்.
1. உங்கள் தரவுகளைக் காப்புப்பிரதி எடுத்தல்
உங்கள் பழைய ஸ்மார்ட்போன், லேப்டாப் அல்லது வேறு எந்த சாதனத்தையும் நீங்கள் எக்ஸ்சேஞ்ச் செய்தாலும், அதிலுள்ள உங்கள் அனைத்துக் கோப்புகளையும் மீடியாவையும் இழக்க விரும்ப மாட்டீர்கள். எனவே உங்கள் பழைய கேஜெட்களில் இருந்து தேவையான எந்தத் தரவையும் காப்புப் பிரதி எடுப்பது உங்கள் முதல் பணியாக இருக்க வேண்டும். Instagram, Canva அல்லது Google Suite செயலிகள் போன்ற கிளவுட் அடிப்படையிலான வையின் தரவு தானாகவே காப்புப் பிரதி எடுக்கப்படும். நீங்கள் பதிவிறக்கிய ஆவணங்கள், கோப்புகளைக் கைமுறையாகக் காப்புப் பிரதி எடுக்க வேண்டியிருக்கும்.
மீடியாவைப் பொறுத்தவரை, நீங்கள் மற்றொரு சாதனம் அல்லது வெளிப்புற ஹார்டு டிரைவைப் பயன்படுத்தி கைமுறையாகக் காப்புப் பிரதி எடுக்கலாம் அல்லது உங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைக் காப்புப் பிரதி எடுக்க Google Drive அல்லது iCloud Drive போன்ற கிளவுட் ஸ்டோரேஜ் சேவையைப் பயன்படுத்தலாம்.
2. சாதனத்தை மீட்டமைத்தல்
உங்கள் பழைய சாதனத்திலிருந்து உங்களுக்குத் தேவையான அனைத்தையும் எடுத்தவுடன், அந்தக் கோப்புகள், மீடியா, உங்கள் கணக்குகளுடன் பேமெண்ட் விருப்பங்கள் மற்றும் சாதனத்தில் உள்ள பிற உள்ளமைவுகளை அகற்ற வேண்டும். ஆம், முழுமையான ஃபேக்டரி மீட்டமைப்பைச் செய்ய வேண்டும். இதன் மூலம் பழைய உரிமையாளரைக் கண்டரியக்கூடிய, அவரது தரவுகளைத் தவறாகப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்புகள் ஏதுமின்றி உங்கள் சாதனத்தை எக்ஸ்சேஞ்ச் சர்வீஸில் கொடுத்து விடலாம்.
பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளின் அமைப்புகளில் மீட்டமைக்கும் விருப்பத்தைத் தேடி உங்கள் சாதனத்தை மீட்டமைக்கலாம். ஆனால், லேப்டாப் மீட்டமைப்பை மின்னிணைப்பில் இணைத்து பொறுமையாகச் செய்ய வேண்டியிருக்கும். இது ஒப்பீட்டளவில் அதிக நேரம் எடுக்கும். அனைத்தும் மீட்டமைக்கப்பட்டதும், உங்கள் சாதனம் பாதுகாப்பான எக்ஸ்சேஞ்சுக்குத் தயாராகிவிடும்.
3. சேதமடைந்த அல்லது பழுதான பாகங்களைக் கண்டறிதல்
பெரும்பாலான சாதனங்களை எக்ஸ்சேஞ்சிற்குத் தயார் செய்வதற்கு மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு படிநிலைகள் போதுமானதாக இருக்கலாம், மேலும் சில படிநிலைகளை மேற்கொள்ளலாம். அதில் முதலாவது சாதனத்தில் ஏதேனும் சேதம் உள்ளதா, ஏதேனும் குறைபாடுள்ள அல்லது செயலிழந்த பாகங்கள் உள்ளனவா என்று கண்டறிவதாகும்.
எக்ஸ்சேஞ்ச் செய்வதற்கு முன் இதுபோன்ற ஏதேனும் சிக்கல்களைப் புகாரளிப்பது மிகவும் முக்கியமானதாகும், ஏனெனில் இது உங்களுக்குக் கிடைக்கும் இறுதி விலையைப் பற்றித் தெரிந்து கொள்ளவும், எக்ஸ்சேஞ்ச் செய்யுமிடத்தில் கடைசி நிமிட சங்கடங்களைத் தவிர்க்கவும் உதவும்.
4. சாதனத்தில் பெட்டியையும், பாகங்களையும் தயாராக வைத்தல்
இது ஒரு முக்கியமான படிநிலையாகத் தோன்றாமல் போனாலும், எக்ஸ்சேஞ்ச் செய்யப்படவிருக்கும் சாதனம்/சாதனத்தின் அசல் பேக்கேஜிங் மற்றும் பாகங்கள் ஆகியவற்றைத் தயாராக வைத்திருப்பது எப்போதும் நல்லது. ஃபோன்கள் மற்றும் மடிக்கணினிகளில், சார்ஜர் , கேபிள்கள் போன்ற அசல் பாகங்கள், எக்ஸ்சேஞ்சிற்குப் பிறகு தயாரிப்பின் முழு விலையைப் பெறுவதற்கு அவசியமாக இருக்கலாம். தயாரிப்புடன் வந்த அத்தகைய சாதனங்கள் கைவசம் இல்லை என்றால், அதை முன்கூட்டியே கடைக்கு தெரிவிக்கவும்.
5. சாதனத்தைச் சுத்தம் செய்தல்
புதிய கேட்ஜெட் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவதைப் போலவே கடையில் உங்கள் பொருளை எக்ஸ்சேஞ்ச் செய்பவரும் உங்கள் பழைய சாதனம் தூசியின்றிச் சுத்தமாக இருக்க வேண்டுமென விரும்புவார். இது உங்கள் சாதனத்தின் உண்மை நிலையைவிட சிறந்த நிலையில் இருப்பதாகத் தோன்றச் செய்யும்.
உங்கள் கேஜெட் எவ்வளவு அழுக்காக இருக்கிறது என்பதைப் பொறுத்து, மைக்ரோ-ஃபைபர் துணியை கொண்டு நீங்கள் சுத்தம் செய்யலாம் அல்லது முழு சுத்தம் செய்யும் கிட் தேவைப்படலாம் என்பதை நினைவில் கொள்ளவும். உங்களிடம் முழு சுத்தம் செய்யும் கிட் இல்லையென்றால், அருகிலுள்ள பழுதுபார்க்கும் கடை அல்லது அங்கீகரிக்கப்பட்ட சேவை மையத்திற்குச் சென்று உங்கள் சாதனத்தை சுத்தம் செய்து தரும்படி கோருங்கள்.
இனி நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் கேஜெட்/சாதனத்தை நீங்கள் எக்ஸ்சேஞ்ச் செய்யத் திட்டமிட்டுள்ள கடைக்கு எடுத்துச் செல்லுங்கள், மீதமுள்ளவற்றை அங்குள்ள பிரதிநிதி கவனித்துக் கொள்வார்.
மற்ற வீட்டு உபயோகப் பொருட்களை எக்ஸ்சேஞ்ச் செய்வது
உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் தவிர பிற பழைய கேஜெட்களை நீங்கள் எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ளலாம். பழைய தொலைக்காட்சிகள், குளிர்சாதனப் பெட்டிகள், ஏசிகள் மற்றும் வாஷிங் மெஷின்கள் ஆகியவை இதில் அடங்கும். பிராண்டு, மாடல் மற்றும் அதன் நிலை போன்ற காரணிகளைப் பொறுத்து, புதிய சாதனத்தில் தள்ளுபடியைப் பெறலாம், அதே நேரத்தில் உங்கள் பழைய சாதனம் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் மறுசுழற்சி செய்யப்படும். இது அனைவருக்கும் நன்மை தரக்கூடியது தானே?
Unleash your inner geek with Croma Unboxed
Subscribe now to stay ahead with the latest articles and updates
You are almost there
Enter your details to subscribe
Happiness unboxed!
Thank you for subscribing to our blog.
Disclaimer: This post as well as the layout and design on this website are protected under Indian intellectual property laws, including the Copyright Act, 1957 and the Trade Marks Act, 1999 and is the property of Infiniti Retail Limited (Croma). Using, copying (in full or in part), adapting or altering this post or any other material from Croma’s website is expressly prohibited without prior written permission from Croma. For permission to use the content on the Croma’s website, please connect on contactunboxed@croma.com
- Related articles
- Popular articles
Chetan Nayak
Comments